சென்னை பெரியசேக்காடு, ராஜா நகர் எதிரே உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். மேலும் மழைக்காலங்களில், மழைநீர் தேங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.