மண் குவியலால் மக்கள் அவதி

Update: 2026-10-25 19:28 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக சுமார் ரூ.48 கோடியில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. அதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டிய பள்ளத்தை சரியாக மூடாமல் மண் குவியலாக உள்ளது. மண் குவியலால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எதிர் எதிரே வரும் வாகனங்கள் மாறி செல்ல இடையூறாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் பள்ளங்களை சரியாக மூடி தேவையான இடங்களில் சிமெண்டு கான்கிரீட் தரைத்தளம் அமைக்க ஏற்பாடு செய்வார்களா?

-பார்த்தசாரதி, சோளிங்கர். 

மேலும் செய்திகள்