நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா விஜயாபதி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கொத்தங்குளம் விலக்கில் நான்கு புறமும் ரோடுகள் சந்திக்கும் இடத்தில் வழிகாட்டி பலகை இல்லை. இதனால் புதிதாக அந்த வழியாக வரும் பயணிகள் குறிப்பிட்ட ரோடுகள் எங்கே செல்கின்றன என்று தெரிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே அங்கு வழிகாட்டி பலகை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்படுமா?.