சேதமடைந்த சாலை

Update: 2026-11-01 12:48 GMT

முழுக்கோடு கிராம ஊராட்சி கடலிகோடு பகுதியில் கிருஷ்ணசாமி கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-அனில்குமார்,முழுக்கோடு.

மேலும் செய்திகள்