தார்சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-11-01 15:13 GMT

கோபி அருகே மேவானியில் உள்ள தார்சாலை பல மாதங்களுக்கு முன்பு குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்டது. ஆனால் பணி முடிந்து சாலை சரியாக சீரமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக சத்துணவு மையத்துக்கு செல்லும் குழந்தைகள் தவறி பள்ளத்துக்குள் விழுந்துவிட வாய்ப்புள்ளது. பஸ்கள், கனரக வாகனங்களும் இந்த வழியாக சென்று வருகின்றன. இந்த தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்