வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்டு அடிக்க வேண்டும்

Update: 2026-11-01 19:03 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பகுதியில் இருந்து வாலாஜா டோல்கேட் வரை 15 கி.மீ. தூர சர்வீஸ் சாலையில் இரு மார்க்கத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் அடிக்கப்பட்ட வெள்ளை நிற பெயிண்டு முற்றிலும் அழிந்து விட்டது. விபத்துகளை தடுக்க, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சர்வீஸ் சாலையில் உள்ள அனைத்து வேகத்தடைகளில் வெள்ளை பெயிண்டு அடிக்க வேண்டும்.

-ரஞ்சித்குமார், ஓச்சேரி. 

மேலும் செய்திகள்