தார் சாலை அமைப்பார்களா?

Update: 2026-09-27 18:41 GMT

போளூர் அண்ணா சிலை எதிரில் உள்ள சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வருகின்றனர். அங்குள்ள வீரப்பன் தெரு வலது பக்கத்தில் காளியம்மன் கோவில் இடது பக்கத்தில் மேம்பாலமும், ஒரு ஜவுளிக்கடையும் உள்ளது. அந்த இடம் ஒரு முக்கிய சந்திப்பாக உள்ளது. அந்தப் பகுதியில் சிறிது இடம் சாலை அமைக்காமல் விட்டு விட்டனர். அதில் எம்.சாண்ட் மணல் கொட்டினர். அது, பெயர்ந்து சிதறி போய் பள்ளமாகி விட்டது. பள்ளமாக இருக்கும் இடத்தில் மழைநீர் தேங்குகிறது. அந்த இடத்தில் தார் சாலையோ அல்லது சிமெண்டு சாலையோ அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், போளூர். 

மேலும் செய்திகள்