கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி அடிக்கடி விபத்துகளில் சிக்கி வருகின்றனர். மேலும் அவர்களின் வாகனங்களும் அடிக்கடி பழுதடைவதால் கடும் அவதியடைகின்றனர். வாகனஓட்டிகளின் நலன் கருதி சாலை பள்ளத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?