குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-22 17:14 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி நகர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணம் செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி சகதிக்காடாக காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்