சேறும் சகதியுமான சாலை

Update: 2026-11-22 17:24 GMT
விழுப்புரம் அருகே எஸ்.கொள்ளூர் முருகன் கோவில் தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாகவும், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாகவும் காணப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கும், இரவு நேரங்களில் வீடு திரும்புவதற்கும் சிரமப்படுகின்றனர். மேலும், சாலையின் உட்பகுதியில் குட்டைபோல் பள்ளம் இருப்பதால் இரவு நேரங்களில் மாணவர்கள் தவறி விழும் அபாயமும் உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்