கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. குறிப்பாக பள்ளி முன்பு பெரிய பள்ளம் இருப்பதால் சைக்கிளில் வரும் மாணவர்கள் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும், வாகனங்களும் சிரமத்துடன் செல்கின்றன. எனவே, பள்ளம் உள்ள சாலையை சீரமைத்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.