கன்னியாகுமரி விவேகானந்தபுரம் நுழைவு வாயிலுக்கு முன்பு திருநெல்வேலி-நாகர்கோவில் ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இந்த இடத்தில் நாகர்கோவில் செல்லும் சாலையில் இருந்து இடது பக்கம் திரும்பும் வளையில் உள்ளது. இந்த வளைவில் எப்போதும் வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகின்றன. இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி அந்த வளைவில் வேகத்தடை அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலகிருஷ்ணன், கன்னியாகுமரி.