ஜோலார்பேட்டை அருகே கட்டேரி ஊராட்சிக்கு உட்பட்ட பச்சை மிளகாய் வட்டம் பகுதிக்கு செல்லும் சாலை குண்டு குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொது மக்கள், சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குண்டு குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்.
-முருகன், கட்டேரி.