பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-11-15 19:14 GMT

செங்கம் நகராட்சிக்கு உட்பட்ட தளவாநாயக்கன்பேட்டைக்கு செல்லும் தார் சாலையின் குறுக்கே செய்யாற்று மேல் சிறிய பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது. அந்தப் பாலம் சிதிலமடைந்து வருகிறது. அந்த வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பொதுமக்களுக்கும் சென்று வருகிறார்கள். மழைக்காலத்தில் பாலத்தின் மீது வெள்ளநீர் செல்கிறது. பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.சுகுணா, தளவாநாயக்கன்பேட்டை, செங்கம். 

மேலும் செய்திகள்