திருச்சி மாவட்டம், காஜாமலை பகுதியில் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள ரவுண்டானா சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. குழாய் அமைப்பதற்காக சாலை தோண்டப்பட்டு மூடப்பட்ட நிலையில், மீண்டும் அதே இடத்தில் பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.