ராமநாதபுரம் மாவட்டம் பேரையூர் கிராமத்தில் கமுதி-முதுகுளத்தூர் செல்லும் சாலையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் பதிப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரி செய்யாமல் கிடப்பில் போட்டுச் சென்றுள்ளனர். இதனால் சாலை மேலும் சேதமடைந்து வருகிறது. மழை காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கின்றது. மேலும் வாகனங்கள் இந்த பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்படுத் அபாயம் அதிகம் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.