பாலத்தில் குழி

Update: 2026-11-15 10:08 GMT

ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னப்பம்பாளையம் பெரிய கடை வீதியில் சாக்கடை கால்வாய் குறுக்கே சிறிய பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த பாலத்தில் குழி ஏற்பட்டு உள்ளது. நாளுக்குநாள் அந்த குழி விரிவடைந்து வருகிறது. இதனால் பாலம் வலுவிழந்து இடிந்து விழும் அபாயம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்