கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சேதமடைந்த தார் சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைப் பணிகளை விரைந்து முடித்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.