குண்டும், குழியுமான சாலை

Update: 2026-11-15 11:37 GMT

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா உள்ளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட செந்தில்நாதன் நகர் தொடங்கி இந்திரா நகர், கிறிஸ்துராஜா நகர் வரை தெருக்கள் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் சைக்கிளில் செல்லமுடியாமல் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், கும்பகோணம்.

மேலும் செய்திகள்