பயன்படுத்த முடியாத சாலை

Update: 2026-11-15 15:14 GMT

திருச்செங்கோடு கொல்லப்பட்டி காலனி பகுதியில் உள்ள தெருக்களில் கடந்த ஆண்டு தார்சாலைகள் போடப்பட்டன. அவ்வாறு போடப்பட்ட ஒரு தெருவின் சாலை பள்ளமாக உள்ளது. மேலும் அந்த தெருவில் இருந்து பிரதான சாலை ½ அடி மேடாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த தெருவில் இருந்து பிரதான சாலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. நடந்து செல்பவர்களுக்கும் இது சற்று கடினமாகவே உள்ளது. திருச்செங்கோடு நகராட்சி நிர்வாகம் இதனை சீர்செய்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்