ஆனைமலை முக்கோணம் சாலையில் பல இடங்களில் குழி ஏற்பட்டு உள்ளது. அந்த குழியில் மழைநீர் தேங்கி வருகிறது. சில இடங்கள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அந்த வழியக சென்று வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்துடன் விபத்துகள் ஏற்பட்டு வருவதோடு வாகனங்களும் பழுதாகி வருகின்றன. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.