விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிரமங்களில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மற்றும் சாலையில் அன்றாட பயணிக்கும் தொழிலாளர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் அவ்வப்போது சிறு சிறு விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.