சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் சாலையில் அன்றாட பயணிக்கும் பொதுமக்கள், சைக்கிளில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த சாலையால் வாகனங்களிலும் அவ்வப்போது பழுது ஏற்பட்டு வருவதால் மாவட்ட நிர்வாகம் சேதமடைந்து கிடக்கும் சாலையை விரைந்து சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.