மதுரை மாவட்டம் குலமங்கலம் கிராமம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?