முக்கூடல் பேருராட்சி பகுதியில் சுமார் ரூ.13.5 கோடி செலவில் நடந்த அம்ருத் குடிநீர் திட்டத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் மீண்டும் மூடப்படவில்லை. சில இடங்களில் செம்மண் போட்டு மூடப்பட்டுள்ளது. மழை பெய்த நிலையில் இந்த சாலை சேரும், சகதியுமாக குண்டும், குழியுமாக மாறியது. எனவே சாலையை முறையாக சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.