அளுக்குளி கோபிபாளையம் கிராமம் அருகே அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள அம்மன் நகர் வீதி சாலை மண் சாலையாக உள்ளது. இதனால் அருகே உள்ள பாசன வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக வரும்போது சாலையில் தண்ணீர் புகுந்து விடுகிறது. இதன் காரணமாக நடக்கும்போது வழுக்கி விழும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே எங்கள் வீதியில் உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.