திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகராட்சியில் 2 அரசு ஆஸ்பத்திரிகள் இயங்கி வருகின்றன. அதில் போளூர் நகர மத்தியில் செயல்படும் அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றொரு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு அறுவைச் சிகிச்சை, பிரசவம், அவசர பிரிவு, விஷக்கடி பிரிவு செயல்படுகிறது. அது, போளூர்-அத்திமூர் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஆஸ்பத்திரி அருகே அத்திமூர், மாம்பட்டு, போளூரில் இருந்து செல்லும் அனைவரும் இந்தச் சாலை ஒன்றாக கூடும் இடமாகும். அங்கு சாலைகளின் குறுக்கே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனோகரன், போளூர்.