மயானத்துக்கு சாலை வசதி தேவை

Update: 2026-11-15 18:54 GMT

பள்ளிகொண்டா பேரூராட்சியில் அனைத்து மதத்தினருக்கும் தனித்தனியாக மயானம் உள்ளது. இந்துக்களுக்கான மயானம் பாலாற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ளது. மயானத்துக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் உடல்களை கொண்டு செல்ல மக்களுக்கு சிரமமாக உள்ளது. பாலாற்றில் வெள்ளம் வந்தால் இடுப்பளவு உயரத்துக்கு நீரில் சென்று உடல்களை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. மயானத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரேசன், பள்ளிகொண்டா. 

மேலும் செய்திகள்