கோவை வேடபட்டி அய்யாவு நகர் 4-வது வீதியில் உள்ள சாலை பழுதடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்ைக எடுக்கவில்லை. தற்போது மழையும் பெய்து வருவதால் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே அந்த பள்ளத்தை உடனடியாக மூடி சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.