கரடுமுரடான சாலை

Update: 2026-11-22 12:58 GMT

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே அண்ணாபேட்டை தொடக்கப்பள்ளி, உண்டியலடி, உதயராசபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கிராம சாலைகள் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள் செல்வோர் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். மேலும் நடந்து கூட செல்ல முடியாத நிலையில் லாயக்கற்று உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஒட்டிகள் சாலையில் சென்று வர அவதிப்படுகின்றனர். எனவே ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ள மேற்கண்ட சாலைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டும்.

பொதுமக்கள், வாய்மேடு

மேலும் செய்திகள்