அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியம், காசாங்கோட்டை கிராமத்தில் இருந்து சித்தமல்லி நீர்த்தேக்கம் சாலை வழியாக கார்குடி கிராமம் செல்லும் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.