பாலக்கோடு-தர்மபுரி நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. தக்காளி மார்க்கெட் பகுதி, நான்கு ரோடு, எம்.ஜி. ரோடு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் அதிக அளவில் மண் தேங்கியுள்ளது. இதன் காரணமாக இவ்வழியே இருசக்கர வாகனங்களில் செல்வோர் மண்ணில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலையோரம் உள்ள மண்ணை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.