ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை முக்கிய சாலையாகும். ரெயில் நிலையம் அருகிலுள்ள பகுதி உள்பட 2-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையில் பள்ளங்கள் உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.