வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2026-11-22 13:51 GMT

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் இருந்து முருகன் கோவில் செல்லும் தார்சாலை கடந்த 2 ஆண்டுகளாக ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. சாலை முழுவதும் பள்ளமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகனஓட்டிகள் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே போர்க்கால அடிப்படையில் இச்சாலையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்