தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-11-22 14:15 GMT

வெண்ணந்தூர் அடுத்து அளவாய்ப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள மாணவர் விடுதி எதிரே உள்ள சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அந்த வீதிகளில் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்