தேனி கொடுவிலார்பட்டியில் இருந்து அரண்மனைப்புதூர் வரை செல்லும் சாலை செங்குத்தாக உள்ளது. இதில் விபத்துகளை தவிர்க்க 15-க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடைகள் இருப்பதை அறிய வெள்ளைக்கோடுகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. அதோடு வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேவையான இடத்தில் மட்டும் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.