குண்டும் குழியுமான சாலை

Update: 2026-11-22 15:44 GMT

புதுச்சேரி - கடலூர் சாலையில் தற்போது ரெயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஏ.எம்.டி. வளாகத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது. சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்