தார் சாலை போட வேண்டும்

Update: 2026-11-22 17:46 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் புதூர் ஆதிராவிடர் காலனியில் 2007-2008-ம் ஆண்டு தார் சாலை போடப்பட்டது. அந்தத் தார் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறி மண் சாலையாக உள்ளது. சேதமான சாலையை தார் சாலையாக மாற்ற பல்வேறு துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எங்கள் பகுதியில் உள்ள கந்தன் வீடு முதல் மாரியம்மன் கோவில் வரை தார் சாலை அமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.மூர்த்திகாளி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர்.

மேலும் செய்திகள்