ஏலகிரிமலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. அதில் 4-வது வளைவில் ஓரிரு மாதங்களுக்கு முன்பு கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் இளங்கோவடிகள் வளைவு என்று இருந்த தடுப்புச்சுவர் வளைவு உடைந்து சேதமாகி உள்ளது. அந்த வளைவு அபாயகரமானதாகும். நெடுஞ்சாலைத்துறையினர் சுற்றுலா வரும் மக்களின் நலன் கருதி 4-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள இளங்கோவடிகள் தடுப்புச் சுவரை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும்.
-யுககவி வேந்தன், திருப்பத்தூர்.