குண்டும், குழியுமான சாலை

Update: 2026-09-27 17:30 GMT

சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் சுங்கச்சாவடியில் தொடங்கி காமலாபுரம், சிக்கனம்பட்டி, தும்பிபாடி வரை உள்ள இணைப்பு சாலைகள் மற்றும் ஆர்சி செட்டிப்பட்டி காமலாபுரம் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் மேம்பாலத்தின் கீழே உள்ள சர்வீஸ் ரோடு கடும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் சர்வீஸ் ரோடு இருபுறமும் சேதமடைந்து மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்