கீரப்பாளையம் அருகே பூதங்குடி ஊராட்சி அள்ளூர் கிராமம் கிழக்குத் தெருவில் இருந்து காலனிக்கு செல்லும் சாலை பணிகள் தொடங்கப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. ஆனால் சாலை பணிகளை முடிக்காமல் ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட நிலையிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் ஜல்லி கற்களில் இடறி விழுந்து விபத்துகளில் சிக்கிக் கொள்கின்றனர். அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.