திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு பகுதியில் திருப்பத்தூர்-ஆலங்காயம் சாலையோரம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். சாலையோரம் மற்றும் சாலை தடுப்பிலும் மண் குவியல் உள்ளது. இதனால் சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையோரமும், சாலை தடுப்பிலும் கிடக்கும் மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வெங்கட்ரமணன், குரிசிலாப்பட்டு.