குண்டும், குழியுமான சாலை

Update: 2026-09-13 17:20 GMT

சேலம் குகை திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தியேட்டர் எதிரில் கருங்கல்பட்டி மெயின் ரோடு செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கருங்கல்பட்டி, களரம்பட்டி, எருமாபாளையம், செல்லக்குட்டிகாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்