தென்காசி ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்க நடைபாதை உள்ளது. இதனை ஏராளமான பொதுமக்கள் தினமும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென இந்த சுரங்கப்பாதை மூடப்பட்ட நிலையில், கடந்த 2 மாதங்களாக திறக்கப்படாமலேயே உள்ளது. ரெயில்வே சுரங்க நடைபாதை மீண்டும் திறக்கப்படுமா?