சங்கராபுரம் அருகே ராமராஜபுரம்- விரியூர் செல்லும் சாலை கடும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், விளைபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கி அடிக்கடி விபத்துகளில் சிக்கியும் வருகின்றனர். எனவே குண்டும், குழியுமாக உள்ள சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.