திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு பகுதியில் பாரதி நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் உள்ளது. அதில் இருந்து கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. மழை காலங்களில் தண்ணீர் நிரம்பி விடுவதால் அந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கும் அப்பள்ளத்தில் அடிக்கடி கீழே விழும் நிலை உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகமும், நெடுஞ்சாலைதுறையினரும் இணைந்து சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க அப்பகுதியில் சிறுபாலம் அமைக்க வேண்டும்.
-லோகநாதன், திருப்பத்தூர்.