விபத்துகளை தடுக்க வெள்ளை கோடு போடப்படுமா?

Update: 2026-08-02 17:48 GMT

அரக்கோணத்தில் திருத்தணி, சோளிங்கர், காஞ்சீபுரம், பூந்தமல்லி நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்தச் சாலைகளில் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையின் நடுவே வெள்ளை நிற கோடு மற்றும் பிரதிபளிப்பான் இல்லாமல் உள்ளது. இதனால் இரவில் செல்லும் வாகனங்கள் சாலை மையப் பகுதியை தாண்டி எதிர் திசையில் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மாவட்ட நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து, சாலை நடுவே வெள்ளை கோடு மற்றும் பிரதிபளிப்பான் ஆகியவை அமைக்க வேண்டும்.

-தினகரன், அரக்கோணம்.

மேலும் செய்திகள்