திண்டிவனத்தில் சேடன் குட்டை தெரு, கிடங்கல் முத்துகிருஷ்ணன் தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை பணிக்காக சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. ஆனால் பணிகள் முடிந்தும் சாலை சரிசெய்யப்படாததால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் உள்பட அனைவரும் கடும் அவதியடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?