கிடப்பில் போடப்பட்ட சர்வீஸ் சாலை பணி

Update: 2026-09-20 14:07 GMT

ராசிபுரம் அடுத்த ஆண்டகளூர் கேட்டில் இருந்து நாமக்கல், சேலம் செல்லும் சாலைகளில் 2 கி.மீ. வரை சர்வீஸ் ரோடு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் சர்வீஸ் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைகின்றனர். மேலும் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து கனரக வாகனங்கள் நிறுத்துகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்