கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து துடியலூர் வழியாக கணபதி செல்லும் இணைப்பு சாலையில் உடையாம்பாளையம் வரை சாலை சேதம் அடைந்து உள்ளது. தற்போது பெய்து வரும் மழையில் அந்த சாலையில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.